8-8-08
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com
சொல்றது நம்ம வெங்கட்ராமன் at 11:26 PM 4பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: புவி வெப்பமடைதல்
பாரதிதாசனும் எரிபொருள் விலையும்
உலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.
அப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
சொல்றது நம்ம VIKNESHWARAN at 8:52 PM 5பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: இயற்கை, எண்ணெய் விலை, பாரதிதாசன்
மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?
இயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் சொல்லி இருக்கிறார்.
கேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?
மதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிகெட் அம்பயர் ‘சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன ‘டேவிட் - கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!
நன்றி : ஆனந்த விகடன்
சொல்றது நம்ம வெங்கட்ராமன் at 1:15 AM 2பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: இயற்கை
தண்ணீர்... தண்ணீர்....
சொல்றது நம்ம VIKNESHWARAN at 3:44 AM 7பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: நீர்
இந்த தீபாவளி க்கு நீங்க நரகாசுரன் ஆகப் போறீங்களா. . . .?
வணக்கம், எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயம் தான். புத்தாடை, வித விதமான பலகாரங்கள், பட்டாசுகள் என்று நம்மை சந்தோஷப் படுத்த எத்தனையோ விஷயங்கள் தீபாவளியில்.
மக்களை கொடுமைப் படுத்தி, அவர்களுக்கு கஷ்டம் தந்த நரகாசுரன் என்ற அரக்கணை வதம் செய்ததன் கொண்டாட்டமாக இந்த தீபாவளி கொண்டாடப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களை கொடுமைப் படுத்தி அவர்களை மகிழ்ச்சியாக வாழவிடாதவனை அரக்கர்கள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த புவியில் இருக்கும் எத்தனையோ உயிரினங்கள் ஜீவித்திருக்க காரணமாக இருக்கும் நம் இயற்கையை அழிப்பவர்களை என்ன வென்று சொல்வது. . . . .?
வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த தீபாவளி திருநாளில் நாம் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை நம் வாயு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டியது எங்கள் கடமை.
இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்ப்போம். . . . .
நம் இயற்கையை காப்போம். . . . .
தீபாவளி அன்று இயற்கையை இம்சித்து நீங்கள் நரகாசுரன் ஆகப்போகிறீர்களா. . . . .?
கிட்டத்தட்ட 7 வருடங்களாக நான் பட்டாசுகளை வெடிப்பது இல்லை. எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்க்கு கூட நாங்கள் பட்டாசுகள் வாங்குவதில்லை. சிறியவர்களுக்கு புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பட்டாசுகளினால் உண்டாகும் தீமைகளை விளக்குங்கள்.
நீங்களும் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்றால் பின்னூட்டத்தில் கட்டாயம் தெரியப்படுத்துங்கள்.
கட்டாயம் வெடி வெடித்து பக்கத்து வீட்டுக்காரர் காதை கிழிக்க விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும்
சொல்றது நம்ம வெங்கட்ராமன் at 12:43 AM 10பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: காற்று மாசு
இரட்டைக் குவளைகளைப் போன்ற மோசமான குவளைகள
ஜாதி மத பேதம் சொல்லி, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது ஒரு காலாம். காலங்களும் மாறி காட்சிகளும் மாறி எல்லோரும் ஒர் இனமே என்ற நல்ல எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். இரட்டைக் குவளை முறைகள் மனித இனத்தையும் மனிதத் தன்மையையும் பாழ் படுத்தியது போல, இன்னும் சில குவளைகள் நம் மண்ணை பாழ் படுத்திக் கொண்டிருக்கின்றன.
அது வேறு எதுவும் இல்லை, நீங்கள் தினமும் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் தான்.
தற்சமயம் இது சுகாதாரமாகவும், பயன் படுத்த எளிதாகவும், நமக்கு மிகவும் வசதியாகவும் தெரியலாம். நமக்கு இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் சில நிமிட பயணைத் தந்து விட்டு, எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு இந்த மண்ணுக்கு தீராத தீங்கை தரப் போவது என்பது உன்மை.
இந்த டம்ளர்கள் மண்ணில் புதைந்து போகும் போது மழை நீர் மண்ணில் புகாத வண்ணம் அடைத்துக்கொள்கிறது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது.
இவற்றை எரிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிட்டு நம் சுவாசம் மூலம் நமக்கும் தீங்கு இழைக்கிறது.
இப்படி எந்த வகையில் பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் டம்ளர்களால் நமக்கு கிடைக்கும் நன்மை என்பது சொற்பம், தீமை என்பது ஏராளம். இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் உபயோகத்தை குறைப் போம். சரி எப்படி குறைப்பதுன்னு கேக்குறீங்களா.
* டீ கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் பிளாஸ்டிக் டம்ளர் வேண்டாம் என்று சொல்லுங்கள்
* ஒயின் ஷாப்பில் சோடா மிக்ஸ் பண்ணாமல் ராவாக அடிக்கவும். சோடா மிக்ஸ் பண்ணும் போது தானே டம்ளர் தேவைப் படுது. ராவா அடிச்சா உங்க உடம்புக்கு மட்டும் தான் கேடு, மிக்ஸ் பண்ணி அடிச்சா இந்த மண்ணுக்கும் கேடு, நியாபகம் வச்சுக்குங்க.
* திருமண வீடுகளில் உணவு பரிமாறும் போது பந்தாவாக பிளாஸ்டிக் டம்ளர் உபயோகிக்காமல் சாதரன டம்ளர்களை உபயோகிக்கலாம்.
தல இங்க சொன்ன விஷம் சாதாரண விஷயம் இல்ல, இதன் தீவிரத்தை நாம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் நம்மிடையே விழிப்புணர்வு வேண்டும்.
இன்றைய நம் அலட்சியம் நாளைய நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்.
சொல்றது நம்ம வெங்கட்ராமன் at 4:02 AM 17பேர் கருத்து சொல்லி இருக்காங்க, நீங்க . . .
Labels: பாலிதீன்



