நதிகள் ஆயிரம், நீருக்கு பஞ்சம்...


நீர். இது உலகு வாழ் உயிரினங்களுக்கு அத்தியாவசியப் பொருள். நீரின்றி உயிரினங்கள் வாழ முடியாது. நீர் இல்லாத உலகத்தை நினைத்துப் பாருங்கள், வறண்ட பூமி உயிரில்லாமல் சுருண்டு போய் கிடக்கும்.
மனித நாகரிகம் தொடங்க காரணமாக இருந்தது நீர்தான். இந்திய, சீன மற்றும் எகிப்திய நாகரிகமென அனைத்தும் நீர் நிலை பகுதிகளில் தான் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மை. மனித நாகரிகம் வளர்ச்சியடைய தொடங்கிய காலத்தில் நீர், நிலம், காற்று என எல்லாவற்றயும் இலவசமாக அனுபவித்து வந்தான் மனிதன். காலப்போக்கில் மனிதனின் மனதை சுயநலம் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஆசைகளும் தேவைகளும் அதிகரித்தது.
இதன் விளைவு என்ன? இலவசமாக உற்பத்தியாகும் நீரை, 500ml குடி நீர் பாட்டில் 1 ரிங்கிட் என காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டான் மனிதன். அப்படி என்றால் இன்னும் 50 ஆண்டுகளில் இந்த நிலை எப்படி இருக்கும் பூமித்தாய் கொடுக்கும் நீரை பங்கு போட்டு லாபம் பார்க்கும் நிலமையை நம்மால் மாற்ற முடியுமா? செத்துப் போய் கிடக்கும் ஜீவ நதிகளுக்கு நம்மால் உயிர் கொடுக்க முடியுமா?
நான் ஆரம்ப கல்வி பயிலும் சமயத்தில், இயற்கை பாதுகாப்பு தொடர்பான பல கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். ஒரு முறை நீர் தூய்மைக் கேட்டை பற்றிய உரையை முடித்தவரிடம், ஒரு கேள்வி கேட்டேன். “எதற்காக நீரை சிக்கனமாக உபயோகிக்க சொல்கிறீர்கள்? நம் நாட்டிலும் இது போல் எற்படுமா?” என அவர் காட்டிய சில படங்களை குறித்துக் கேட்டேன். வறட்ச்சியடைந்த இடத்தின் மக்களின் வாழ்வை காட்டுவதாக இருந்தது அப்படங்கள்.
சில நாட்டில் மட்டுமே மக்கள் குறைந்த விலையில், சுத்தமான நீரை பயன்படுத்தும் வாய்ப்பைப் பேற்றிருக்கிறார்கள். நமக்கும் இங்கு நீர் சுலபமாக கிடைக்கிறது. அதை பயனுள்ள வழியில் உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது என்றார் அவர்.
நமக்கு தேவையான அளவிற்கு நீரை, மழை கொடுக்கிறது. இருந்தும் ஒரு சில ஆண்டுகளில் நீரின் விலை ஏற்றம் காண்கிறது. காரணம் கேட்டால், மக்களிடம் நீரை சிக்கனமாக உபயோகிக்க கற்றுத் தருவதற்கு இதைவிட சிறந்த வழியில்லை என பூசி மழுப்புகிறார்கள். இது கடுமையான முறையாக இருந்தாலும் ஒரு விதத்தில் நல்லதுதானே.
ஏன் மனிதன் வீடுகளில் மழை நிரை சேமிக்க சோம்பல் கொள்கிறான். குடிக்க, குளிக்க மற்றும் சமைப்பதை தவிர்த்து இதற தேவைகளுக்கு மழை நீரை பயன்படுத்தலாமே. செலவும் குறையும் தேவையும் பூர்த்தியடையும்.
தொடரும்....
அன்புடன்,
விக்னேஷ்

2 Comments:

said...

//**நீங்களாவது எதாவது சொல்லிட்டு போங்க **//

ஐயாம் ய காம்பிளான் பாய்....
என்ன விளையாட்டு இது...
மாத்துங்க சார்...
ரொம்ப பாவமா இருக்கு

said...

/// என்ன விளையாட்டு இது...

சும்மா தான் சார். இப்ப பாருங்க வேற மாதிரி இருக்கும்.

///////////////
மாத்துங்க சார்...
ரொம்ப பாவமா இருக்கு
///////////////

முயற்சி பண்றேன் தல.