மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

இயற்கையின் ஆளுமை என்பது அசாதாரனமானது. இயற்கையின் வலிமையை மிக அழகாக சில வரிகளில் மதன் அவர்கள் தன்னுடைய கேள்வி பதில் பகுதியில் சொல்லி இருக்கிறார்.

கேள்வி : மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா ?

மதன் பதில் : அண்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக் கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்குமாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால் பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிகெட் அம்பயர் ‘சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதனை வெல்ல, இது என்ன ‘டேவிட் - கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!

நன்றி : ஆனந்த விகடன்

3 Comments:

said...

சரி தான்.

said...

//மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!//

சிரிங்கடா, சிரிங்க… இன்னும் பத்தே மாசந்தேன்… பூமாதேசி சிரிக்கப் போறா, எல்லாம் மண்ணுக்குள்ள போக போறீங்க... ஏத ஒரு படத்துல பார்த்திருக்கேன்... அந்த டயாலாக் தான் இது.

said...

உண்மை. முற்றிலும் உண்மை.