ஏன் இந்த ரத்தவெறி. . . .?

"அலட்சியம் ஒரு பொது எதிரி"

என்று ஏதோ ஒரு பின்னூட்டத்தில் படித்தேன். நம்முடைய முன்னேற்றம், நம்முடைய நாட்டின் முன்னேற்றம் என்ற பல வகையிலும் அது மிகப் பெரிய தடையாகவே உள்ளது. நம்முடைய அலட்சியங்கள் நம்மை பாதித்தால் அது நம்மோடு போய்விடுகிறது. ஆனால் இயற்கையை பாதிக்கும் நம்முடைய அலட்சியங்கள் நம்மையும் நமக்கு பின்னால வரப்போகும் தலைமுறையையும் பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி என்ன நான் அலட்சியமாக இருந்து விட்டேன் இயற்கை விஷயத்தில் என்று கேட்கிறீர்களா. . . .?

நீங்கள் உபயோகிக்கும் ஒரு சிறிய பாலிதீன் பை என்னென்ன கொடுமைகளை இயற்கைக்கு செய்கிறது தெரியுமா. . . .?

மண்ணுக்குள் போகும் பாலிதீன் பை எவ்வளது மழை நீர் மண்ணுக்குள் போகாமல் தடுக்கிறது தெரியுமா. . . .?

அவற்றை எரிக்கும் போது காற்று எவ்வாறு மாசுபடுகிறது என்று தெரியுமா. . . . ?

எல்லாம் உங்களுக்கு தெரியும் இருந்தாலும் நீங்கள் குறைக்கமாட்டீர்கள்.

இயற்கையை அழிக்க வேன்டும் என்று ஏன் இந்த இரத்த வெறி. . . . . ?

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

எங்கள் முயற்சியும் அதுவே. . . . ?

உங்களுக்கு சொல்ல வேண்டியது எங்கள் கடமை. . .

0 Comments: