உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் எரிபொருளுக்கும் உலக அளவிலான இராணுவங்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இது சிலருக்கு மட்டும் தெரியும். பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.
உலக மக்களை இப்படிப் பாடாய்ப்படுத்துகிற எரிபொருளுக்கும் இராணுவங்களுக்கும் இரத்த உறவு உண்டு என்பது அண்மையில் தான் தெரிய வந்தது.
இதை நான் விளக்குவதற்கு முன்பு எரிபொருளின் பூர்வீகத்தை நீங்கள் சற்று தெரிந்து கொண்டால் நல்லது.
அமேரிக்காவில் ‘பென்சில்வேனியா’ என்று ஒரு மாநிலம். அதிலே, ‘கிடுஸ்விலே’ என்ற ஓர் ஊர். அந்த ஊரை சேர்ந்தவர் ட்வின் பிரேக். ஒரு நாள் கிணறு வெட்டினார். அந்தக் கிணற்றை அவர் எதற்கு வெட்டினார். மனிதனுக்கு வேண்டிய குடி நீருக்கா? அல்லது வாகனங்களின் குடிநீரான எரிபொருளுக்கா?
கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது எனும் பழமொழி கர்னல் எட்வின் பிரேக்கைப் பொறுத்த வரைக்கும் நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது. அவர் அன்று வெட்டிய கிணற்றிலிருந்து வந்தது குடிநீரல்ல, அலாவுதீன் பூதம்... அது தான் பெட்ரோல்.
ஆனாலும் அன்றய நிலையில் எரிபொருளின் மதிப்பு யாருக்கும் தெரியாததால் எட்வின் பிரேக்கை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. அன்றைய தேவை மண்ணெண்ணய் தான். அதைக் குறி வைத்துதான் எட்வின் கிணறு வெட்டி இருக்கிறார்.
20 ஆம் நூற்றாண்டு வரைக்கும் மண்ணேண்ணையோடு உபரி பொருளாகவே பெட்ரோல் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் அல்வா எடிசன் எனும் புண்ணியவான் மின்சாரத்தை கண்டுபிடித்த பிறகு மண்ணெண்ணய், பெட்ரோல் முதலியவற்றுக்குறிய மதிப்பு சரிந்துவிட்டது.
அவரவர் வீட்டுவிளக்கை ஏற்றுவதற்கு ‘எரிபொருள் பொன்’ தேவைபடவில்லை. பொன்மகளாய் தொன்றிய மின்மகள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்துவிட்டாள்.
1880 களில் மின்சார உற்பத்தி இயந்திரம் எடிசனால் அறிமுகப்படுத்தப்பட்ட போது எரிபொருளுக்கு இருந்த மதிப்பு காலில் மிதிப்பட்ட பூப்போல ஆகிவிட்டது.
ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு முன்பதாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டதும் எரி பொருளுக்கு முக்கியதுவம் அதிகரித்தது.
குறிப்பாக முதலாவது உலகப் போரில்தான் எரிபொருள் தேவை தனிச்சிறப்பு வாய்ந்ததாகிவிட்டது. போர்க்காலத்தில் தளவாடங்கள். உணவு பொருட்கள் முதலியவற்றை ஓர் இடத்தில் இருந்து மற்றும் ஓர் இடத்திற்கு வாகனத்தின் வழிக் கொண்டு சொல்ல எரிபொருள் தேவைப்பட்டது.
முதலாவது உலகப் போர் மட்டும் வராமல் இருந்திருந்தால் எரிபொருளின் தேவை முக்கியதுவம் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான். போதாதற்கு 1941-1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போர் எரிபொருளின் பெருமளவுத் தேவைக்கு அடித்தளமிட்டுவிட்டது.
இதுவரை கூறியவை அனைத்தும் பழைய கதை. இன்றய எரிபொருள் விலையேற்றத்திற்கு வருவோம்.
இன்று 133 டாலராக இருக்கும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1970 ஆம் ஆண்டு வெறும் 1.80 அமேரிக்க டாலர். இந்த விலையையும் உலகத்திலேயே எரிபொருள் உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்கும் சவுதி அரேபியாதன் நிர்ணயித்தது.
1974ஆம் ஆண்டு 10 டாலராக கிட்டதட்ட 80% உயர்ந்துவிட்டது. இதற்கு காரணம் என்ன? எல்லாம் இந்தப் பாழாய் போனா போர்தான். 1973ல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த விலையேற்றம் கண்டது.
பிறகு 1979 ஆம் ஆண்டு 10 டாலரில் இருந்து 20 டாலராக உயர்ந்தது. இதற்கு காரணம் ஈரானில் மூண்டேழுந்த இஸ்லாமியப் புரட்சியாகும்.
அப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.
அப்படியும் இப்படியுமாக 1980 ல் 30 டாலராக இருந்த விலை 1981 தொடக்கத்தில் 39 டாலராக அதிகரித்தது. இதற்கு காரணம் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே மூண்ட போர்.
அதற்கு பிறகு 1990 செப்டம்பர் முதல் அக்டேபர் வரை குவைத் நாட்டின் மீது ஈராக் நடத்திய படையெடுப்பால் 40 டாலருக்கு மேல் உயர்ந்துவிட்டது.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட கத்தரினா எனப்படும் சூறாவளி காரணமாக ஒரு பப்பாய் கச்சா எண்ணை விலை திடீரென 70 டாலராக உயர்ந்துவிட்டது. மெக்ஸிக்கேவில் இருக்கும் எண்ணெய் உற்பத்தி நிலையம் சூரவளியில் நாசமடைந்ததை தொடர்ந்து இந்த விலையேற்றம் ஏற்பட்டது.
இந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி 100 டாலராக அதிகரித்துவிட்டது. இதற்குக் காரணம் நைஜீரியாவில் ஏற்பட்டக் கலவரம், பாகிஸ்தான் நிலவரம் மற்றும் அமேரிக்க எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட விநியோகப் பிரச்சனை முதலியன.
இந்த ஆண்டில் மார்ச் 13 ஆம் தேதி யாரும் எதிர்பாராத அமேரிக்க டாலர் பலவீனமும், சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துவரும் எரிபொருள் தேவை ஆகியவற்றினால் எழுந்த ஆருடத்தின் விளைவாக இந்த விலை உயர்வு எனக் கூறப்பட்டது.
நலிவடையும் அமேரிக்க பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மே 6 ஆம் தேதி எரிபொருள் விலையை 120 டாலராக உயர்த்திவிட்டது.
சீனாவின் தேவை அதிகரிப்புக்கிடையில் அமேரிக்காவின் எரிபொருள் துறையில் புதுக் கண்டுபிடிப்புகள் எதிர்பாராதபடி குறைந்துவிட்டதாலும் மே 21 ஆம் தேதி உலகச் சந்தையில் 133.82 டாலராக எரிபொருள் விலையை அதிகரித்துவிட்டது.
இவையனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமமைந்தத இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம்.
‘ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரானைத் தாக்குவேம்’ என்று இஸ்ரேல் வெறும் மிரட்டலை விடுத்த உடனேயே 133 டாலராக இருந்த எரிபொருள் விலை 139 டாலராக உயர்ந்துவிட்டது.
இதுவரை எரிபொருள் உயர்வுக்கான காரணங்களைத் தெரிந்துக் கொண்ட நீங்கள் இவற்றுக்கான காரண காரியங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளும் போர் நடவடிக்கைகளுமே எரிபொருள் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருப்பதை உணர்வீர்கள்.
எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டுமானால் பாரதிதாசன் பாடியது போல புதிய உலகம் படைக்கப்பட வேண்டும்.
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். அது போல போர் இல்லாத புதிய உலகத்தை மக்கள் படைத்தால் தான் எண்ணெய் விலையைத் தடுக்க முடியும்.
தகவல்: மலேசிய நண்பன்