வணக்கம், எல்லோருக்கும் எங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடிய விஷயம் தான். புத்தாடை, வித விதமான பலகாரங்கள், பட்டாசுகள் என்று நம்மை சந்தோஷப் படுத்த எத்தனையோ விஷயங்கள் தீபாவளியில்.
மக்களை கொடுமைப் படுத்தி, அவர்களுக்கு கஷ்டம் தந்த நரகாசுரன் என்ற அரக்கணை வதம் செய்ததன் கொண்டாட்டமாக இந்த தீபாவளி கொண்டாடப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்களை கொடுமைப் படுத்தி அவர்களை மகிழ்ச்சியாக வாழவிடாதவனை அரக்கர்கள் என்று சொல்கிறோம். ஆனால் இந்த புவியில் இருக்கும் எத்தனையோ உயிரினங்கள் ஜீவித்திருக்க காரணமாக இருக்கும் நம் இயற்கையை அழிப்பவர்களை என்ன வென்று சொல்வது. . . . .?
வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த தீபாவளி திருநாளில் நாம் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகை நம் வாயு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் உங்களுக்கு இந்த விஷயத்தை நினைவூட்ட வேண்டியது எங்கள் கடமை.
இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்ப்போம். . . . .
நம் இயற்கையை காப்போம். . . . .
தீபாவளி அன்று இயற்கையை இம்சித்து நீங்கள் நரகாசுரன் ஆகப்போகிறீர்களா. . . . .?
கிட்டத்தட்ட 7 வருடங்களாக நான் பட்டாசுகளை வெடிப்பது இல்லை. எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்க்கு கூட நாங்கள் பட்டாசுகள் வாங்குவதில்லை. சிறியவர்களுக்கு புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பட்டாசுகளினால் உண்டாகும் தீமைகளை விளக்குங்கள்.
நீங்களும் பட்டாசுகள் வெடிப்பதில்லை என்றால் பின்னூட்டத்தில் கட்டாயம் தெரியப்படுத்துங்கள்.
கட்டாயம் வெடி வெடித்து பக்கத்து வீட்டுக்காரர் காதை கிழிக்க விரும்புகிறவர்கள் இங்கே சொடுக்கவும்
இந்த தீபாவளி க்கு நீங்க நரகாசுரன் ஆகப் போறீங்களா. . . .?
சொல்றது நம்ம வெங்கட்ராமன் at 12:43 AM
Labels: காற்று மாசு
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
உண்மைதான் நண்பரே... எதற்காக பட்டாசு வெடித்து காசை கரியாக்க வேண்டும். எனக்கும் பட்டாசு வெடிக்க பிடிக்காது... பட்டாசு வெடித்து பணத்தை விரயமாக்க விரும்புவோர் அதை முதியோர் இல்லங்களுக்கு கொடுத்தால் இந்நாளில் மற்றவரையும் மகிழ்வித்த திருப்தி கிடைகும்.. படிப்பவர்கள் சற்று சிந்தித்தால் நன்மை பயக்கும்..
இந்த நேரத்துக்கு தேவையான ஒரு தலைப்பு. எல்லாரும் இந்த பதிவை படிப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன் வெங்கட். :-)
உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். :-)
நன்றி. மை பிரண்ட்.
//வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.//
அதான் தினம் தினம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறோமே. இன்னும் ஒரு நாள் சேர்ந்தால் ஒன்னும் ஆகிவிடாது.
இதை விட மோசமானது வாகன புகையும், தொழிற்சாலையில் இருந்து வரும் புகையும் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் போராடுங்கள்.
//எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்க்கு கூட நாங்கள் பட்டாசுகள் வாங்குவதில்லை. சிறியவர்களுக்கு புரியவைக்க வேண்டியது பெரியவர்களின் கடமை. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பட்டாசுகளினால் உண்டாகும் தீமைகளை விளக்குங்கள்.//
பாவங்க பசங்க. அவங்களுக்கு என்ன தான் விளக்கி சொன்னாலும் போன நாட்கள் திரும்பி வராது. அட் லீஸ்ட் அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமே. விடுங்க.
***************************************
அதான் தினம் தினம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறோமே. இன்னும் ஒரு நாள் சேர்ந்தால் ஒன்னும் ஆகிவிடாது.
***************************************
வாங்க சீனு, இன்னும் ஒரு நாள் சேர்ந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள் சீனு.
இப்படிப் பட்ட அலட்சியம் மிகவும் மோசமானது.
*****************************************
பாவங்க பசங்க. அவங்களுக்கு என்ன தான் விளக்கி சொன்னாலும் போன நாட்கள் திரும்பி வராது. அட் லீஸ்ட் அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டுமே. விடுங்க.
*****************************************
எங்க வீட்டுக்கு நான் தாங்க ஒரே பையன். பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது நானே எடுத்த முடிவு (ஸ்கூல்ல படிக்கும் போது).
//இப்படிப் பட்ட அலட்சியம் மிகவும் மோசமானது.//
அலட்சியம் இல்லைங்க. நீங்களே சொல்றீங்க "வாகனப் புகை, தொழிற்சாலை கழிவுகள், பீடி, சிகிரெட் என்று நம் வாயு மணடலத்தை தினம் தினம் நாம் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம்"னு. இவையாவும் தினம் தினம் நடப்பவை. இதன் வீரியம் தான் அதிகம். இவைகளை தான் தடுக்கனும். வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடும் தீபாவளியினால் மேலே சொன்னதை விட அவ்வளவு வீரியம் இல்லைன்னு சொல்றேன்.
சீனு மன்னிக்கவும் நீண்ட நாட்களாக பின்னூட்டத்தை வெளியிட முடியவில்லை.
சீனு உங்க எண்ணமும் என் எண்ணமும் ஒன்றுதான், சுற்றுச் சூழல் நன்றாக இருக்க வேண்டும் என்று.
நன்றி.
வணக்கம் நண்பரே , உங்களின் சேவை ,இன்றைய தேவை , தொடருங்கள் வாழ்த்துக்கள்
நன்றி காஞ்சி பையன்.
உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை. . . .
கிட்டதட்ட நான் 21 வருடங்களாக பட்டாசுகளை வெடிப்பதில்லை.
என் மகளுக்கும் அதே போல பழக்கபடுத்தி இருக்கிறேன்.
Post a Comment