வின்சென்ட், செல்வேந்திரன், விக்னேஷ்வரன் அடைக்கலம், வேதமூர்த்தி

இந்த பதிவின் தூண்கள். இங்கே தங்கள் இயற்கை சம்பந்தமான பதிவுகளை தரப்போகும் பதிவர்கள்

வின்சென்ட்

தமிழ்மனத்தில் அண்மையில் இனைந்தவர்கள் பட்டியலில் தான் வின்சென்ட் பதிவு அறிமுகமானது. வின்சென்ட் இயற்கை பற்றிய விஷயஞானம் உள்ளவர் என்பது அவர் பதிவிலே தெரிந்தது. ஒரு குழுவாக இணைந்து இயற்கை சம்பந்தமான வலைப் பதிவு தொடங்கவேண்டும். அதில் உங்களால் பங்களிக்க முடியுமா என்று கேட்டேன். மனமுவந்து இசைந்தார்.


செல்வேந்திரன்

இருவர் மட்டும் போதாது இன்னும் சிலரை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தபோதே மனதில் தோன்றியவர் செல்வேந்திரன். வந்த வேகத்திலேயே நட்சத்திரமாகி பலரையும் கவர்ந்தவர். என்ன செய்ய விழைகிறேன் இதுவரை எடுத்த முயற்சிகள் வரை செல்வேந்திரனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பினேன். ஜமாய்ச்சுடலாம் என்று நம்பிக்கை தந்தார்.

விக்னேஷ்வரன் அடைக்கலம்

எகிப்திய அரசரின் வரலாற்றையும், தஞ்சை சரித்திரத்தையும் மலேசியாவில் இருந்து எழுதி என்னைக் கவர்ந்தவர். இந்த வலைப் பூவைப் பற்றி பேசினேன், மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்தார். இயற்கை சம்பந்தமாக பல தகவல்களை சேமித்து வைத்திருப்பதாகவும் பதிவு எழுத ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்தார்.

வேதமூர்த்தி

கல்லூரியில் இருந்து என் நண்பர். எனக்கு தெரிந்து பிளாஸ்டிக் பாலிதீன் உபயோகத்தை குறைத்தவர்கள் நானும் அவரும் மட்டுமே. இந்த வலைப் பக்கம் உருவாக இவரும் ஒரு காரணம்.

நான்

மேலே உள்ளவர்களை இங்கு பதிவு எழுத வைத்து, அந்த பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு தபால் காரன்.

2 Comments:

said...

உங்கள் முயற்சிகள் வெற்றியடையட்டும்..

said...

varaverkkaththakka avasiyamaana muyarchi, vaalththukkaL,